News April 23, 2025
அரசு பேருந்து ஓட்டுனருக்கு 6 மாதம் சிறை

தூத்துக்குடி கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் மோகன். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் மீது அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அரசு பேருந்து ஓட்டுனரான முடிவைத்தானேந்தலை சேர்ந்த முருகனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Similar News
News November 16, 2025
தூத்துக்குடி: SBI வங்கி வேலை; நாளை கடைசி நாள்

பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான 103 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 28 – 42 வயதிற்குட்பட்ட இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் – ரூ.97 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை(நவ.17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் <
News November 16, 2025
தூத்துக்குடி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று விடுத்துள்ள அறிவிப்பில் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளின் வசிக்கும் மக்கள் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
ALERT: தூத்துக்குடிக்கு உதவி எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை (நவ. 17) கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும், தாழ்வான பகுதி மக்கள் பத்திரமாக இருக்கவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரச உதவிக்கு 0461-2340101, 9486454714, 9384056221 ஆகிய எண்களை அழைக்கலாம் எனவும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். தககவலை எல்லோருக்கும் உடனே SHARE செய்யுங்க


