News November 24, 2024
அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் சாதனை

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நேற்று தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தியாகராஜன் டேக்குவாண்டோ மையத்தில் நடைபெற்றது. இதில், அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி ராஜஸ்ரீ தங்கப் பதக்கமும், 6ஆம் வகுப்பு மாணவி அக்சயா வெள்ளிப்பதக்கமும் வென்றனர். தங்கப்பதக்கம் வென்ற ராஜஸ்ரீ, மாநில அளவிலான போட்டியில் பங்குபெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News February 19, 2026
செங்கல்பட்டு: 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் இறையன்பு(21). இவர் பழைய பெருங்களத்தூர், கிரீன் சிட்டி பகுதிக்கு இறையன்பு மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர். அப்போது அங்கு இருந்த மற்றொரு தரப்புக்கும், இறையன்புவின் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கும்பல் இறையன்புவின் வீட்டிற்கே சென்று வெட்டியுள்ளனர். அவர்களை தடுக்க வந்த அவரின் தந்தை, சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
News February 19, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.