News May 8, 2025

அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சம்மர் கேம்ப்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று (நவ.12) பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஈக்கோ பிரண்ட்லி சம்மர் கேம்ப் நடைபெறுகிறது. கோமுகி அணை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை நீக்குதல், சுற்றுச்சூழல்கள் பற்றிய விழிப்புணர்வு பேனர் பெயிண்டிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும்.

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல், இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 11, 2025

பயிர் காப்பீடு திட்டம்-ஆட்சியர் வேண்டுகோள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இவ்வாண்டில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா -2) மற்றும் உளுந்து பயிருக்கு நவம்பர் 15-ஆம் தேதி வரையில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.11) தெரிவித்துள்ளார். மேலும், தேவையான ஆவணங்களை பயன்படுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!