News August 21, 2024
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு பதவியேற்றது முதல் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், உடனடியாக அவற்றை நிறைவேற்றக்கோரியும் போராட்டம் நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவரவேண்டும் என்பதே முக்கியம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 19, 2026
நாமக்கல்: மக்களே உடனே SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!
News January 19, 2026
நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்ட காவல்துறை, வாட்ஸ்அப்பில் பரவும் போலியான அறிவிப்புகள் மற்றும் பரிசு, சலுகை தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரபல நிறுவனங்கள் பெயரில் வரும் லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடியில் சிக்கினால் 1930 சைபர் எண் (அ) www.cybercrime.gov.in புகார் அளிக்கலாம்.
News January 19, 2026
நாமக்கல்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

நாமக்கல் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04286- 281331 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


