News August 6, 2024

அரசு அங்காடியில் ரூ.16 லட்சத்திற்கு பட்டுக் கூடுகள் விற்பனை

image

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு அங்காடியில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3,754 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக கிலோ 523 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக கிலோ 231 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 435 ரூபாய்க்கும் என மொத்தமாக ரூ.16,33,110 பட்டுக்கூடுகள் விற்பனையானது.

Similar News

News January 18, 2026

இதுதான் தர்மபுரியின் நிஜ பெயரா?

image

“தர்மம் + புரி” = தர்மபுரி, தமிழில் “தர்மம்” என்பது நீதியும் நற்பணியும் குறிக்கும்.“புரி”என்பது இடம் என அர்த்தம் கொண்டது. தர்மபுரி என்பது”நீதியின் நகரம்”என்ற பொருளைக் கொண்டது. சில வரலாற்று ஆவணங்களில் தர்மபுரி, ”தகடூர்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் தர்மபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமானது. சேலத்திலிருந்து இருந்த தருமபுரி, அக்.2 1965ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.ஷேர்

News January 18, 2026

தருமபுரி: 12th, டிப்ளமோ, ITI படித்தவரா நீங்கள்?

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்

News January 18, 2026

தருமபுரி பெண்களே: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

image

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் <>தாட்கோ <<>>இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்! ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!