News January 12, 2025
அரசுப் பள்ளி மாணவியை பாராட்டிய அமைச்சர்

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் ஜவகர் சிறுவர் மன்ற சிலம்ப மாணவி மேஹா அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா ஆண்டு போட்டிகளில் சுயமி பிரிவில் தேர்வாகி வெற்றி பெற்றுள்ளார். 10ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனிடம் விருதும் பாராட்டு சான்றிதழும் பெற்றார்.
Similar News
News November 14, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர்-14ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.85 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
News November 14, 2025
நாமக்கல் நான்கு சக்கர வாகன காவலர் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் நவம்பர்-14ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கல் – தங்கராஜ் (9498170895), வேலூர்- சுகுமாரன் (8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி (9498169110), திருச்செங்கோடு – பெருமாள் (9498169222), திம்மநாயக்கன்பட்டி – ரவி (9498168665), குமாரபாளையம் – ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர்.
News November 14, 2025
திருச்செங்கோடு: காப்பர் ஒயர்களை திருடிய 8 பேர் கைது

திருச்செங்கோடு நகரம் ஈரோடு ரோடு பகுதியில் பி.எஸ்.என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான காப்பர் ஒயர்களை திருடிய எட்டு பேர் கைது ஒரு லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் திருடப் பயன்படுத்திய பொலிரோ கார் பறிமுதல், செய்தனர். நீதிபதி 8 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பிஎஸ்என்எல் நிறுவன இளநிலை பொறியாளர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.


