News May 16, 2024
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மதிப்பெண் ராஷ்மிகா – 489,இரண்டாவதாக
ரக்ஷனாஸ்ரீ – 484, மூன்றாவதாக ஐஸ்வர்யா – 482,சுபர்னாதேவி – 482 ஆகிய மாணவிகளுக்கும் மற்றும் தனியார் பள்ளி மாணவி தேனி மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த நிதாஸ்ரீ – 496 ஆகியோருக்கு வளர்ச்சிக் பேரவை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 16, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (15.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 15, 2025
66.90 அடியாக குறைந்த வைகை அணையின் நீர்மட்டம்

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து முதல் போக மற்றும் ஒருபோக பாசனம், மதுரை மாவட்ட தேவை மற்றும் குடிநீருக்காக என அணையில் இருந்து வினாடிக்கு 2299 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் நீர் வரத்து 1402 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இன்று (நவ.15) 66.90 அடியாக குறைந்து காணப்படுகிறது.
News November 15, 2025
தேனி: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

தேனி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <


