News August 21, 2024
அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த மதுரை ஐ கோர்ட்

மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமில் சுற்றுச்சுவர் இடிந்து பலியான 11வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்த தொடர்புடைய அரசு துறைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு. மேல்முறையீடு செய்ய கூச்சமாக இல்லைய எனவும் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதை ஏற்றுகொள்ள முடியாது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
Similar News
News January 22, 2026
மதுரை: 17 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்

மதுரை கோ.புதூரை சேர்ந்த வேல்முருகன் மகன் பாரத் (20), 17 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் கோ.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற போது சிறுமி 5 மாத கர்ப்பம் என தெரிந்தது. மதுரை மேற்கு ஊர் நல அலுவலர் பாலஜோதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் பாரத்தை இன்று கைது செய்தனர்.
News January 22, 2026
மதுரையில் ஒர் நாள் வேலை நிறுத்தம்

தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, பிப்.12 அன்று மதுரையில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதுகுறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜன.22-இல் மதுரையில் நடந்தது. இச்சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என இக்கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
News January 22, 2026
மதுரை வழியாக புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை

திருவனந்தபுரம் முதல் தாம்பரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் புதிதாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த, அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் மதுரை வழியாக தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலில்11 பொது பெட்டிகள் உட்பட 21 பெட்டிகள் இடம் பெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கிறார்.


