News January 13, 2025
அரக்கோணம் புறநகர் ரயில் சேவை நேரம் மாற்றம்

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜனவரி 14) தைப்பொங்கல் அன்று அரசு விடுமுறை என்பதால் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், ஆகிய பகுதிகளில் ஞாயிறு தினத்திற்கான அட்டவணை முறையில் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
ராணிப்பேட்டை: ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்!

ராணிப்பேட்டை: ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் – ஆம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று நேற்று(நவ.6) காணப்பட்டது. இதுகுறித்து தகவ அறிந்ததும் சம்ப இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 7, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 6, 2025
தாயுமானவர் திட்டத்தை பொதுமக்களிடம் கேட்டறிந்த ஆட்சியர்

இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் M.மரியம் பல்லவி பல்தேவ், ஆட்சியர் சந்திரகலா தலைமையில் தாயுமானவர் திட்ட குறித்து ஆய்வு நடைபெற்றது. இன்று (நவ.6) வேலம் ஊராட்சியில் கூட்டுறவுத் துறையின் மூலம் தாயுமானவர் திட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு குறித்து கேட்டறிந்தார்


