News November 25, 2025
‘அம்மா Sorry.. என் சாவுக்கு இவர்தான் காரணம்’

சத்தீஸ்கரில் தனியார் பள்ளியில் மாணவி(15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரின்சிபல் பாலியல் தொல்லை கொடுத்ததே, தனது சோக முடிவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பிரின்சிபலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களே அவசரப்படாதீர், தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
Similar News
News January 17, 2026
தமிழ் இயக்குநர்கள் தெலுங்கு பக்கம் தாவ இதுவா காரணம்?

அட்லியை தொடர்ந்து தற்போது லோகேஷும், அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே, ஜூனியர் NTR நடிப்பில் நெல்சன் புதி படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழில் பெரும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குவதாலும், தெலுங்கில் ₹75 கோடி முதல் ₹100 கோடி வரை சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதாலும், தமிழ் இயக்குநர்கள் இத்தகைய முடிவை எடுப்பதாக கூறுகின்றனர்.
News January 17, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 583 ▶குறள்: ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். ▶பொருள்: எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.
News January 17, 2026
IND vs NZ: அணியில் அதிரடி மாற்றம்

NZ-க்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் 2 வீரர்களை BCCI மாற்றியுள்ளது. அதன்படி, வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரவி பிஷ்னோய், திலக் வர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி: சூர்யா (C), அபிஷேக், சாம்சன், ஸ்ரேயஸ், ஹர்திக், துபே, அக்சர், ரிங்கு, பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப், குல்தீப், வருண், இஷான், ரவி பிஷ்னோய். 5 போட்டிகளை கொண்ட இந்த தொடர் 21-ம் தேதி தொடங்குகிறது.


