News November 25, 2025
அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உயரிய விருது

சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான ‘வெள்ளி யானை’ விருதினை அன்பில் மகேஸ் பெறுகிறார். உ.பி.,யின் லக்னோவில் நாளை (நவ.26) நடைபெறும் 19-வது தேசிய ஜாம்போரி விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இவ்விருதை அவருக்கு வழங்கவுள்ளார். TN சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக இருக்கும் அன்பில், இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
Similar News
News January 21, 2026
தப்புக் கணக்கு போட்டாரா செங்கோட்டையன்?

அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சி கை கொடுக்காமல் போனதால் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். ஆனால், தற்போது NDA கூட்டணியில் இணைந்த <<18913412>>TTV தினகரனை<<>> EPS வரவேற்றுள்ளார். அதேபோல, NDA கூட்டணியில் OPS மீண்டும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
News January 21, 2026
உலகளவில் 3-ம் இடம்: இந்திய விஸ்கியின் விலை ₹10 லட்சம்!

2025-26-ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விஸ்கி பிராண்டுகளை Jim Murray’s Whisky Bible பட்டியலிட்டுள்ளது. உலகம் முழுவதும் 4,000 விஸ்கி பிராண்டுகளை ஆய்வு செய்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், உலகின் நம்பர் 1 இடத்தை அமெரிக்காவின் ‘Full Proof 1972 Bourbon’ பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் ‘The Expedition (15 year Old Single Malt)’ 3-ம் இடத்தில் உள்ளது. இதன் விலை ₹10 லட்சமாகும்.
News January 21, 2026
BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால், அவர்களை தன்னிச்சையாக அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியை பெற்ற பிறகே, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாதவர்களை பணிக்கு திரும்ப அனுமதிக்க கூடாது என HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


