News June 17, 2024

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆட்சியர்

image

2022-23 ஆண்டில் ஊரக குடிநீர் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அமைச்சர் கே.என்.நேருவை அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்.எல்.ஏ ராஜேந்திரன், எம்.பி. செல்வகணபதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News January 21, 2026

சேலம்: ஒரே ஆண்டில் 377 போ் பலி!

image

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சேலம், தருமபுரி, ஓசூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் எல்லைகளில் மொத்தம் 377 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தைக் கடப்பது மற்றும் கவனக்குறைவே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

News January 21, 2026

ஜனவரி 24 கடைசி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகள் ஜனவரி 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 24 மாலைக்குள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!