News November 28, 2024

அப்பாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

image

தமிழக சட்டப்பேரவை தலைவரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களை மீது அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Similar News

News November 10, 2025

நெல்லையில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி

image

தமிழ்நாடு அரசின் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ், ஐஸ்வர்யா ஸ்ரீ கல்வி நிறுவனம், திருநெல்வேலியில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்படும். பயிற்சிக்காலத்தில் மொத்தம் ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க நவ. 11 இறுதி நாள். விபரங்களுக்கு 90250 79679 தொடர்பு கொள்ளவும்.

News November 10, 2025

நெல்லை: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

image

களக்காடு சிங்கிகுளம் இந்திரா நகரை சேர்ந்த காயத்ரி இந்த மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காயத்ரி கடந்த 5ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கபட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News November 10, 2025

நெல்லையில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

image

திசையன்விளை அருகே நந்தன்குளம் பகுதியில் ஜெயபாண்டி என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் ஆதிச்சநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் அவரது மனைவி பூரணி மகன் மகளுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு விரக்தியடைந்த வெங்கடாசலம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!