News April 11, 2024
அப்துல்கலாமின் பேராசிரியர் காலமானார்

திருச்சியைச் சேர்ந்த லாடிஸ் லாஸ் சின்னதுரை (101) திருச்சியில் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்று, அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஆசிரியராக இருந்தவர். இயேசு சபையில் தனது 41வது வயதில் இணைந்து 1970 மார்ச் 13ல் பங்கு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் காலமானார்.
Similar News
News November 11, 2025
திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<
News November 11, 2025
திருச்சி: சபரிமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலை குறைப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் ஹாசுர் சாகிப் நந்தட் ரயில் நிலையத்திலிருந்து வரும் 20,27, டிச.4,11,18,25, ஜன.1,8,15 ஆகிய தேதிகளில் (வியாழன் மட்டும்) திருச்சி வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வியாழன் காலை 10 மணிக்கு நந்தட் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொல்லம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
திருச்சி மக்களே, முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர்,<


