News August 5, 2024
அனுமதியின்றி ராட்டினங்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை

திருப்பத்தூர் அருகே பசலிக்குட்டை முருகன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. விழாவில் பொழுதுபோக்கிற்காக ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் அந்த ராட்டினம் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இனி ராட்டினங்கள் உரிய அனுமதியன்றி அமைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 18, 2026
திருப்பத்தூர்: திருமண தடை நீங்க அற்புத கோயில்

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் அமைந்துள்ளது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதேஸ்வரர் கோயில். அங்கம் பிளவு பட்டு இருப்பதால் அங்க நாதேஸ்வரர் என்ற பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்த கோயிலில் அம்மன் சுபத்ரா ஜனனி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். திருமண தடையுள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 18, 2026
திருப்பத்தூர்: 12th, diploma, ITI முடித்தவரா நீங்கள்?

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 18, 2026
திருப்பத்தூர் பெண்களே: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் தாட்கோ <


