News December 16, 2025
அனுமதியின்றி புகைப்படம் பயன்படுத்தினால் கடும் தண்டனை

அனுமதியின்றி ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ன் படி, இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News January 25, 2026
மதுரை: ரூ.50 லட்சம் வரை கடனுதவி

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய <
News January 25, 2026
மேலூரில் இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு அரிவாள் வெட்டு

மேலூரைச் சேர்ந்த அஜித்குமார் இன்ஸ்டாகிராமில் ‘பிளாக் பாண்டா’ என்ற பெயரில் இருந்து வருகிறார். இவர் மேலூர் மதுரை, சிவகங்கை பகுதிகளில் கடை திறப்பு விழாவிற்கு செல்வதும், அங்கு பொருட்களை பிரபல படுத்துவதில் பணம் பெற்று ஈடுபட்டு வந்தார். இன்று மேலூரில் புதிதாக திறக்கப்பட்ட கடை திறப்பு விழாவின் போது ஏற்பட்ட தகராறில் அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
News January 25, 2026
மதுரை: ஜீப்பிலிருந்து ஆண் சடலம் மீட்பு

மேலூர் – சிவகங்கை சாலையில், மலம்பட்டி அருகே கணேஷ் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் பின்புறம் பயன்படுத்தப்படாத பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். அங்கிருந்து துர்நாற்றம் வீசவே அருகில் சென்ற பார்த்த போது நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்த ஜீப் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. அவர் யார் ? எப்போது இங்கு வந்தார் ? என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


