News February 23, 2025
அந்தியூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

அந்தியூரை அடுத்த கோவிலூர், கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு, இவா்,தனது கரும்புத் தோட்டத்துக்கு உரமிட சென்றபோது குட்டியுடன் சிறுத்தை படுத்திருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கராசு, அங்கிருந்து தப்பியோடி கிராம மக்களிடம் தெரிவித்துள்ளாா். இதனைத் தொடா்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் இரு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வனத்துறை நேற்று நடவடிக்கை மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
கூலி தகராறில் பெயிண்டர் கொலை: ஈரோட்டில் அதிர்ச்சி

ஈரோடு, அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஆண்டவர்(55). இவரிடம் வேலை பார்த்து வந்த சதீஷ் (38) என்பவர்,நேற்று முன்தினம் தனக்கு தர வேண்டிய கூலி ₹2,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சதீஷ், ஆண்டவரின் நெஞ்சுப் பகுதியில் அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ஆண்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை!
News July 8, 2025
ஈரோடு: திருவிழா பூச்சாட்டுதலுடன் ஆரம்பம்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கேசரிமங்கலம் கிராமம் சேகண்டியூர் பகுதியில் அமைந்துள்ள குட்ட முனியப்பன் கோவில், ஆடி 1 பொங்கல் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த, குட்ட முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டனர்.
News July 7, 2025
ஈரோடு: சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்

ஈரோடு அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுவன், கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்து, சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சிறுவனுக்கு பாம்பு விஷமுறிவு மருந்து 20 பாட்டில்கள் செலுத்தி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் 72 மணி நேரத்திற்கு பின் சிறுவனுக்கு நினைவு திரும்பியது. சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்களை, சிறுவனின் பெற்றோர் பாராட்டினர்.