News May 15, 2024

அந்தியூர் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் – பர்கூர் மலைப்பகுதியில் இன்று(மே 15) அதிகாலை 6 மணியளவில் காங்கேயத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் கொல்லேகாலில் இருந்து கால்நடை தீவனம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி தட்டகரை அருகே மலை பாதையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ஜெபி(35) பரிதாபமாக உயிரிழந்தார். பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

ஈரோடு: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

ஈரோடு கடன் தொல்லையால் விபரீத முடிவு!

image

ஈரோடு கள்ளிப்பட்டி சஞ்சீவ் காந்தி வ வீதியைச் சேர்ந்த சாமிநாதன் 35 கட்டிட தொழிலாளி. இவருக்கு சத்யா என்பவர் உடன் திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சாமிநாதனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டின் சமையலறையில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 11, 2025

கோபியில் வசமாக சிக்கிய இருவர்!

image

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நிச்சாம் பாளையம் கிராமத்தில், நேற்று (டிச. 10) வி.ஏ.ஓ. சுரேந்திர குமார் நடத்திய சோதனையில், அனுமதியின்றி நான்கு யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரி பிடிபட்டது. இதனையடுத்து லாரியைத் திங்களூர் போலீசில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில்மண் கடத்தியதாகச் சக்திவேல் மற்றும் ராஜேஷ்குமார் என்ற இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!