News October 13, 2025
அதிர்ச்சி..மேட்டுப்பாளையத்தில் 190 கடைகளை இடிக்க முடிவு!

மேட்டுப்பாளையம்-அவிநாசி இரு வழி சாலை தற்போது நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மேட்டுப்பாளையம் நகரில் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்காக 190க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்க அளவீடு செய்து நெடுஞ்சாலைத்துறையினரால் மார்க் செய்யப்பட்டுள்ளது. இந்த கடைகள் எப்போது இடிப்பார்கள் என்ற கேள்வி உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Similar News
News November 17, 2025
கோவை ஆசிரியர் தகுதி தேர்வில் 1526 பேர் ஆப்சென்ட்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு(TET)நேற்று, இன்று என இரு தினங்கள் நடைபெற்றது. அதன்படி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2 தேர்விற்கு 12,370 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 10,844 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். மீதமுள்ள 1526 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
News November 16, 2025
மோடி வருகை: கோவையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 19.11.2025 புதன்கிழமை கோவை வருகை புரிவதை முன்னிட்டு, நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் அமல். அதன்படி, அவினாசி ரோடு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் உள்ளிட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்படும். கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவு தடை, விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் தடை. பொதுமக்கள் மாற்றுப்பாதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News November 16, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


