News March 28, 2024
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஆரணி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இன்று முதற்கட்ட பிரச்சாரமாக ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேதாஜிபுரம் ஊராட்சியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். உடன் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், அதிமுக அமைப்பு செயலாளர், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர அதிமுக செயலாளர்கள், பேரூர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 17, 2026
தி.மலை: நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி!

ஆரணி, மாமண்டூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (65). இவர் கடந்த 13ம் தேதி ஆரணி – செய்யாறு சாலையில் நடந்து சென்றபோது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நேற்று அவரது மருமகன் அளித்த புகாரின்பேரில், ஆரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
தி.மலை: குளிக்க சென்றவர் பிணமாக வந்த சோகம்!

ஆரணி, குன்னத்தூரை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (56). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கிணற்றுக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் மேலே வராததால், அங்கிருந்தவர்கள் ஊருக்குள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவரைத் தேடிய நிலையில், நேற்று காலை 10 மணியளவில் பிணமாக தமீம் அன்சாரி உடலை மீட்டனர்.
News January 17, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (16.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


