News January 14, 2025

அதிமுக சார்பில் Ex அமைச்சர் பொங்கல் வாழ்த்து

image

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடன், உவகையுடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், நம் மக்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி, எனது அன்பிற்குரிய மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Similar News

News November 15, 2025

சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்!

image

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட சிலம்பப் போட்டியில் குளித்தலை நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்திய பிரியா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பரிசுத்தொகை ரூபாய் 25000/- பெற்றுள்ளார். அதேபோல 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜமுனா என்பவர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து ரூ.15000/- ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள்ளார்.

News November 15, 2025

கரூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

image

குளித்தலை அடுத்த நெய்தலூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்(35). இவர் வெண்ணைமலை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திகேயன் தான் பணிபுரியும் பள்ளியில் படித்து வரும் 14 வயது சிறுமிக்கு கடந்த 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி புகார் அளிக்கையில் கரூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News November 15, 2025

கரூரில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

image

1)கரூர் மாவட்ட இணையதளம்: https://karur.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
2)கரூர் மாநகராட்சி: https://www.tnurbantree.tn.gov.in/karur/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்கள், ஆவணங்கள் போன்ற சேவைகளைப் பெறலாம்.
3)மாவட்ட நீதிமன்றம்: //karur.dcourts.gov.in/ இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகள், வழக்கு குறித்த ஆவணங்களைப் பெறலாம்.

error: Content is protected !!