News November 29, 2024

அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக புயல் கரையை கடக்கும் போது கன மழையுடன் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

காஞ்சி: ஓடும் பேருந்தில் 18 பவுன் நகை கொள்ளை!

image

வண்டலூர், மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் மனைவி பிரியா (30) தனது 9 வயது மகனுடன் கடந்த 1ம் தேதி வேலூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். காஞ்சி அருகே வந்தபோது, அவரிடம் இருந்த 18 சவரன் நகை காணாமல் போயுள்ளது. பிரியா அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், திருச்சியை சேர்ந்த காசி (30) என்பவரை கைது செய்தனர். அவர் வெளி சந்தையில் 18 லட்சத்துக்கு நகையை விற்றது தெரியவந்தது.

News November 12, 2025

காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலிசார் விவரங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டம் (11.11.2025) இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்கள் அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

News November 11, 2025

காஞ்சிபுரம்: இளைஞர்களே செம வாய்ப்பு உடனே APPLY!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் விண்ணப்பிக்கலாம்<<>> மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

error: Content is protected !!