News November 19, 2025
அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சை: நடிகை மான்யா ஆனந்த் முற்றுப்புள்ளி

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக் கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு <<18320110>>அட்ஜஸ்மென்ட்<<>> பற்றி பேசியதாகவும், அவர் போலியாக இருக்கலாம் என்று தான் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இதனால், 2 நாள்களாக கோலிவுட் சினிமாவில் சுற்றி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, <<18324641>>நடிகர் தனுஷ்<<>> தரப்பும் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 22, 2026
சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை

மத்திய அரசு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு (SIDBI) ₹5,000 கோடி பங்கு மூலதன ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கடன் வழங்குவதை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இதனால், சொந்த தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News January 22, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 22, தை 8 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 22, 2026
அமெரிக்கா காலியாகிவிடும்: ஈரான் மிரட்டல்

அமெரிக்கா, தங்களது உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி-வை தாக்க முயற்சித்தால் அவர்களின் உலகத்தை தீக்கிரையாக்கிவிடுவோம் என்று அமெரிக்காவுக்கு கடுமையான மிரட்டலை ஈரான் ஆயுத படை விடுத்துள்ளது. இதானால், தற்போது அமெரிக்கா – ஈரான் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், என்னை படுகொலை செய்ய முயன்றால் ஈரானை அழித்துவிடுவோம் என்று டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.


