News August 22, 2025
அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம்

திண்டுக்கல்: மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்தில் அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று(ஆக.22) அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இதில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News January 22, 2026
திண்டுக்கல் அருகே பாலியல் தொழில்!

பழனியில் பாலியல் தொழில் செய்வதாக அடிவாரம் காவல் நிலைய போலீசாருக்கு, ரகசிய தகவலகிடைத்தது. அதன்பேரில் இடும்பன் கோவில் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில், திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. இதன் பேரில் தொப்பம்பட்டியை சேர்ந்த சாமிக்கண்ணு, பழனியை சேர்ந்த சுந்தர் ஆகிய இருவரை கைது செய்து, 3 பெண்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
News January 22, 2026
திண்டுக்கல் அருகே பேருந்து மோதி ஒருவர் பலி!

திண்டுக்கல் சென்னம்மநாயக்கன்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (42). இவர் திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியில் உள்ள எம்.வி.எம். கல்லூரி மேம்பாலத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் மீது அரசு பேருந்து மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 22, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான புகார்கள் அல்லது தகவல்கள் இருந்தால், 1098 என்ற அவசர உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.


