News November 2, 2025
அக்டோபரில் உச்சம் தொட்ட UPI பரிவர்த்தனை!

கடந்த அக்டோபரில் 2,070 கோடி UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ₹27.28 லட்சம் கோடியாம். NPCI தரவுப்படி, இது செப்டம்பர் மாதத்தை விட பரிவர்த்தனையில் 5%, பண மதிப்பில் 10% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தினமும் சராசரியாக 66.8 கோடி பரிவர்த்தனைகளும், ₹88,000 கோடி பணமும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. நீங்க UPI மூலம் எவ்வளவு செலவு செஞ்சீங்க?
Similar News
News November 8, 2025
எளியோருக்கு அருமருந்தாகும் எருக்கு மூலிகை

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. ➤செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் ➤செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் ➤இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.
News November 8, 2025
இதுக்கெல்லாம் நான் வரமாட்டேன்: டிரம்ப்

தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என டிரம்ப் கூறியுள்ளார். இந்த மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடப்பது அவமானம் எனச் சாடிய அவர், பிரான்ஸ், ஜெர்மன் வம்சாவளியினர் அந்நாட்டில் கொல்லப்படுவது மோசமான ஒன்று எனவும் விமர்சித்துள்ளார். இதனால், US அதிகாரிகள் யாரும் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
News November 8, 2025
BREAKING: விலை 2 மடங்கு உயர்ந்தது

தமிழகம் – கேரளா இடையே <<18231577>>ஆம்னி பஸ்கள்<<>> இயக்கப்படாததால் விமானக் கட்டணம் இருமடங்கு அதிகரித்துள்ளது. சென்னை – கொச்சின் இடையே வழக்கமாக ₹3,500 ஆக இருந்த கட்டணம் ₹8,000 வரையிலும், சென்னை – திருவனந்தபுரம் இடையே ₹4,500 ஆக இருந்த கட்டணம் ₹9,000 வரையும் உயர்ந்துள்ளது. மதுரை – திருவனந்தபுரம் இடையே, ₹5,000 வரை இருந்த கட்டணம் ₹16,500 வரை உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன் என்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


