News November 29, 2024
ஃபெஞ்சல் புயல்- சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’

சென்னைக்கு நாளை ( நவ.30) அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 11, 2025
சென்னை உஷார் நிலை தீவிர கண்காணிப்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்ந்து சென்னையில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மாலை கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சென்னை புறநகரில் இன்று இரவு முதல் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக விமான நிலையம் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
News November 10, 2025
சென்னை இளைஞர்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாடு அரசு பல திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியான தொழில் முனைவோர் மேபாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் (ஏஐ) பயன்படுத்தி செயலி உருவாக்கம் குறித்த 3 நாள் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள EDII அலுவலகத்தில் நாளை (நவ.11-13) வரை நடைபெறும் இந்த முகாமில் 18 வயது கடந்த 10th முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <


